பிரிட்டனில் நுழைந்த கண்டெய்னரில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட 39 பேரும் சீனர்கள்

லண்டன் நகரின் கிழக்கு பகுதியில் தேம்ஸ் நதிக்கரை ஓரத்தில் வாட்டர்கிலேட் தொழிற்பேட்டை அருகே நேற்று ரோந்துப் பணியில் இருந்த போலீசார் அவ்வழியாக வந்த பல்கேரியா நாட்டு கண்டெய்னர் லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கி சோதனையிட்டனர்.

கண்டெய்னரின் உள்ளே கிடந்த 39 பிணங்களை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சுமார் 25 வயது மதிக்கத்தக்க லாரி டிரைவரை கைது செய்து விசாரித்தனர். கைதான டிரைவர் வடக்கு அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என தெரிய வந்தது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்ற நிலையில் கண்டெய்னரில் கிடந்த 39 பிணங்களும் சீனர்கள் என அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அவற்றில் 38 பெரியவர்கள், ஒரு இளவயதுடையவர் என தெரிய வந்துள்ளது.

கடந்த 2000-ம் ஆண்டு இதே போல் இங்கிலாந்தின் டோவர் துறைமுகத்திற்கு வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த கண்டெய்னர் லாரியில் ரகசியமாக குடியேற வந்த 58 சீனர்களின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply