இன்று சிவாஜிலிங்கம் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் ரெலோவின் விசேட கூட்டம்
ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தொடர்பாக இறுதி தீர்மானமொன்று, இன்று மாலை வவுனியாவில் நடைபெறவுள்ள குறித்த கூட்டத்தில் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. கட்சிக்கு தெரியாமல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த சிவாஜிலிங்கத்திற்கு ஒரு வார காலஅவகாசத்தை ரெலோ வழங்கியிருந்தது.
இந்த காலத்திற்குள் ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுமாறும் அக்கட்சி அறிவுறுத்தல் விடுத்திருந்தது.இந்நிலையிலேயே ரெலோவின் தலைமைக்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply