இனவாதிகள் எம்முடன் இல்லை: அனுரகுமார
இனவாதிகள், அடிப்படைவாதிகள் ஆகியோரை நாம் எம்முடன் வைத்துக் கொள்வதில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த நாட்டை கட்டியெழுப்பி தேசிய ஒற்றுமையை உருவாக்க வேண்டும். முப்பது வருட யுத்தத்தினால் எமது நாடு சீர்குலைந்துள்ளது. இன்னும் எமக்கு யுத்தம் வேண்டுமா, இந்த நாட்டில் 71 வருடங்கள் ஆட்சி செய்தவர்கள் என்ன செய்தார்கள். இனவாதம், அடிப்படைவாதம் என்பவற்றையே ஏற்படுத்தினார்கள். இவர்கள் நாட்டை நாசமாக்கினார்கள்.
இந்த நாட்டில் நாங்கள் ஒன்றுபடாமல் முன்நோக்கி செல்ல முடியாது. யுத்தம் செய்து கொண்டு, சண்டை பிடித்துக் கொண்டு நாங்கள் முன்னோக்கி செல்ல முடியுமா. நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் அடிப்படை வாதிகளுக்கு எதிராக இருக்கின்றார்கள்.
அடிப்படைவாதிகள் எமது நாட்டை சீர்குலைத்தார்கள். முதலில் இனவாதிகளோடு இருக்க கூடாது. நாங்கள் தமிழ், முஸ்லிம், சிங்களம் எந்த பேதமும் இல்லாமல், இனவாதம், அடிப்படை வாதங்களுக்கு இடம்கொடுக்க மாட்டோம்.
தற்போது கோட்டாபய, சஜித் அடிப்படைவாத்ததுடன் உள்ளனர். இந்த அடிப்படைவாதிகள்தான் நாட்டை உருவாக்கப் போகின்றார்கள். இந்த நாட்டில் அடிப்படைவாதம், மதவாதம், இனவாத்தினை தோற்கடிக்கும் ஒரே ஒரு இயக்கம் தேசிய மக்கள் சக்திதான் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply