மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கான இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரை இடைக்கால தடையை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தீர்மானித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நான்கு பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையொப்பமிட்டுள்ளதாக அண்மையில் தெரிவித்தார்.

குறித்த ஜனாதிபதியின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனு மீதான வழக்கின் விசாரணை, மூன்று நீதியரசர்கள் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஜூலை மாதம் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் பின்னர், மரண தண்டனையை நிறைவேற்றும் செயற்பாட்டுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், எதிர்வரும் ஒக்டோபர் 30ஆம் திகதி வரை குறித்த தடை உத்தரவு இருக்கும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply