‘ஜனநாயக தேசிய முன்னணி’ க்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு ஆரம்பம்

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ´ஜனநாயக தேசிய முன்னணி´ அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.தற்போது, இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 12 முன்னணி கட்சிகள் கொழும்பில் ஒன்றிணைந்துள்ளன.

சிவில் அமைப்பு ஒன்றும் இன்றைய தினம் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மாற்று குழுவாக சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உள்ளிட்ட தரப்பினர் இந்த முன்னணியுடன் இணையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply