நலன்புரி முகாம்களின் நிலவரத்தை அறியவும் மீள்குடியேற்ற பணிகளை துரிதப்படுத்தவும் இந்திய சிறப்புத் தூதரொருவர் இலங்கை வருவார்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் உள்ள தமிழர்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், மீள்குடியேற்ற பணிகள் போன்றவை பற்றி அறிந்துகொள்வதற்கு சிறப்பு தூதர் ஒருவரை இலங்கைக்கு அனுப்பி வைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி இந்தியா ஆய்வு செய்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நலன்புரி முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து இந்தியா மிகுந்த கவலை தெரிவித்து உள்ளது. முகாம்களில் உள்ள தமிழர்கள் இன்னும் 6 மாதங்களில் அவரவர் இல்லங்களில் குடியமர்த்தப்படுவார்கள் என்று இந்தியாவுக்கு ஜனாதிபதி ராஜபக்சே உறுதி அளித்துள்ள நிலையில் முகாம்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக இந்தியா இலங்கை அரசுடன் இணைந்து பணியாற்றுமென கருதப்படுகிறது.
அதன் முதற்கட்டமாக யுத்தம் நிகழ்ந்த பகுதிகளில் புலிகளால் புதைக்கப்பட்ட ஏராளமான கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது. அதற்கு இந்தியா நிபுணத்தம் வாய்ந்த கண்ணிவெடி அகற்றும் பிரிவொன்றை இலங்கைக்கு அனுப்பி உதவி வருகிறது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply