தமிழ் மக்கள் அச்சம், சந்தேகமின்றி வாழும் சூழலை ஏற்படுத்துவது எம் கடமை: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

பயங்கரவாதிகளுடன் செய்த யுத்தம் முடிந்துவிட்டது. இனி நாம் எமது தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றி கொள்ள வேண்டும். தமிழ் பேசும் மக்களை பாதுகாக்க வேண்டும்; அவர்கள் பயம், சந்தேகம் இல்லாமல் வாழ வேண்டும்.அதுதான் எமது அனைவரினதும் கடமை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். படைவீரர்களின் வெற்றியைப் பராட்டும் தேசிய விழா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் காலிமுகத்திடலில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தமிழில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அவர் தமிழில் மேலும் குறிப்பிடுகையில்;

இலங்கை நம் எல்லோரினதும் தாய்நாடு, இந்நாட்டில் நாமனைவரும் ஒரு தாயின் மக்களாக சகோதரர்கள் போன்று வாழ வேண்டும். இந்நாட்டில் எந்தவித பேதமும் இருக்க முடியாது. புலிகளுடன் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல. அது பயங்கரவாதத்துக்கு எதிரானதாகும்.

புலிகளின் பிடியிலிருந்து சகோதர அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்கவே எமது படைவீரர்கள் உயிர்த்தியாகங்களைப் புரிந்துள்ளனர். அந்த அர்ப்பணிப்புள்ள சேவையை மறக்க முடியாது.

புலிகளைத் தோல்வியுறச் செய்து நாம் பெற்ற பெரு வெற்றியானது இந்த தேசத்தின் வெற்றி, நீங்கள் பெற்றுத் தந்த வெற்றி இது நாட்டு மக்கள் அனைவரினதும் வெற் றியாகும்.

படைவீரர்களே! பயங்கரவாதிகளுடனான யுத்தம் முடிவு ற்றது. இனி தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள வேண்டும். அவர்களைப் பாதுகாப்பது நம் எல்லோரு டைய கடமையாகும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply