விடுலைப் புலிகளிடமிருந்து வடக்கு முற்றாக விடுவிக்கப்பட்ட பின்னரே 13வது சட்டத் திருத்தம்
தமிழீழ விடுலைப் புலிகளிடமிருந்து வடபகுதி முற்றாக மீட்கப்பட்ட பின்னரே 13வது திருத்தச் சட்டம் சாத்தியமாகுமென சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பாதுகாப்புப் பேச்சாளரான அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிடுகையில்: அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அண்மையில் அலரிமாளிகையில் சந்தித்தபோது, வடபகுதி முற்றாக மீட்கப்பட்டு அங்கு ஜனநாயகம் நிலை நாட்டப்பட்ட பின்னரே அரசியலமைப்பின் 13வது சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ள தாம் திட்டமிட்டுள்ளளதாகத் ஜனாதிபதி தெரிவித்தாக கூறினார்.
வடபகுதியில் அரசு மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் மூன்று கட்டங்களாக செயற்படுத்தப்படும். வடபகுதியை பயங்கரவாதத்திலிருந்து முதலில் விடுவித்து,பின்னர் அங்கு ஜனநாயகத்தை நிலைநாட்டி, அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி அதன் மூலம் அதிகாரங்களை இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்கு வழங்க வேண்டுமென இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி பாரளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ்விடம் தெரிவித்திருந்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply