அரசியலில் நுழைவதற்கு நான் எப்போதுமே ஆசைப்பட்டதில்லை : மனம் திறக்கிறார், மோடி
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்தாண்டுகளாக மாதந்தோறும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாற்றி வருகிறார்.
அவ்வகையில், அவர் தனது இன்றைய வானொலி உரையின்போது ‘என்.சி.சி.’ எனப்படும் தேசிய மாணவர் படை இயக்கத்தில் உள்ள இளையதலைமுறையினருடன் கலந்துரையாடினார்.
பள்ளிப் பருவத்தில் நீங்கள் தேசிய மாணவர் படை இயக்கத்தில் இருந்தபோது எப்போதாவது தண்டிக்கப்பட்டதுண்டா? என்ற ஒரு மாணவரின் கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, ‘இல்லை, நான் ஒருபோதும் தண்டனைக்கு உள்ளானதில்லை’ என தெரிவித்தார்.
மேலும், அரசியலில் நுழைவதற்கு நான் எப்போதுமே ஆசைப்பட்டதில்லை . ஆனால், அரசியலின் ஒரு பகுதியாக தற்போது மாறிவிட்ட நிலையில், என்னால் இயன்ற வரை மக்களுக்கு சிறப்பாக பணியாற்றி வருகிறேன் எனவும் மோடி குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply