அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே நின்ற பெண்ணுக்கு ஏற்பட்ட சோக முடிவு
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் காட்டு பன்றிகள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன. சில சமயங்களில் இந்த காட்டு பன்றிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து, மக்களை அச்சுறுத்தி வருவது வழக்கம்.
அந்த வகையில் ஹூஸ்டன் நகரில் உள்ள அனாஹூவாக் என்ற இடத்தில் காட்டு பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். அதன் பேரில் உள்ளூர் அதிகாரிகள் கூண்டுகளை வைத்து காட்டு பன்றிகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் அனாஹூவாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலைக்கார பெண்ணாக இருந்த கிறிஸ்டின் ரோலின்ஸ் (வயது 59) நேற்று முன்தினம் மாலை தான் வேலை செய்யும் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காட்டு பன்றிகள் கூட்டமாக வந்தன. இதை பார்த்து பயந்துபோன கிறிஸ்டின் ரோலின்ஸ் வீட்டுக்குள் ஓட முயன்றார். ஆனால் அதற்குள் காட்டு பன்றிகள் அவரை சூழ்ந்து கொண்டு கடித்து குதறின. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply