ஜனாதிபதியின் முதலாவது வெளிநாட்டு விஜயம் இன்று
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று (28) நண்பகல் இந்தியா செல்கின்றார். கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவாகும்.
ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் போது, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோரைச் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க, திறைசேரி செயலாளர் சஜித் ஆடிகல, ஜனாதிபதி ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார ஆகியோர் இவ்விஜயத்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply