ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலும் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலும் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்தும் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளார். தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து கலந்துரையாடல் மேற்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும், சஜித் தொடர்ந்தும் புறக்கணித்து வருகிறார்.

இந்நிலையில் ஐக்கி தேசிய கட்சியின் தலைவர்களுக்காக, ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்கள் சிலர் கூடிய கூட்டத்தில் சஜித் பிரேமதாஸ வருகைத்தராமையினால் இறுதியில் தீர்மானம் மேற்கொள்ள முடியவில்லை.

கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கிவிட்டு எதிர்க்கட்சி தலைவர் பதவியை தான் வைத்து கொள்வதற்கு ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார். எப்படியிருப்பினும் இது தொடர்பில் இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்காக விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சஜித் யாருடனும் தொடர்புப்படாமல் தனிமையில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply