மீள்குடியேற்ற திட்டத்திற்கு சர்வதேசம் அங்கீகாரம்: மஹிந்த சமரசிங்க
புலிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்களை மீட்டெடுத்தது போன்று அந்த மக்களை மீண்டும் அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்துவதற்காக இலங்கை அரசு முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு சர்வதேச சமூகம் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது என மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.சர்வதேச சமூகம் என்பது ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல. ஐ. நா. வில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளுமே சர்வதேச சமூகத்தைச் சேர்ந்தவையே. இலங்கைக்கு 47 நாடுகளில் 29 நாடுகள் தமது ஆதரவை வழங்கியிருக்கின்றன.
30 வருடங்களாக புரையோரப் போயிருந்த பயங்கரவாதப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளதுடன், அங்கு சிக்கியிருந்த மக்களை மீட்பதில் மட்டுமல்லாமல், அந்த மக்களை மீளக் குடியமர்த்துவதற்காக அரசாங்கம் துரிதமாக செயற்படுவதையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னெடுத்துவரும் கொள்கைகள் மீதும் நம்பிக்கை வைத்தே ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் பெரும்பான்மையான நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வழங்கின என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகளில் கலந்துகொண்டு நாடு திரும்பியுள்ள அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்று செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார்.
இச் செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்தும் பேசுகையில் :-
இலங்கைக்கு எதிராக, பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஆலோசனைகளை ஐரோப்பிய நாடுகள் முன்வைத்தன. எனினும், இலங்கை அதற்கு முன்னதாகவே மனித உரிமைகள் தொடர்பான ஆலோசனையை தந்திரோபாயமாக ஐ. நா., மனித உரிமைகள் பேரவையிடம் கையளித்திருந்தது.
மேற்கத்திய நாடுகள் இலங்கையுடன் கலந் தாலோசிக்காமலேயே திட்டமிட்டு தமது ஆலோசனைகளை முன்வைத்திருந்தன. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையின் முதல்நாள் பேச்சின் மூலம் அவர்கள் அனைவரும் திட்டமிட்டே இலங்கைக்கு எதிராக செயற்பட்டுள்ளனர் என்பது புலனாகியது.
என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அலுவலகம் ஒன்றைத் திறக்க இடமளிக்க முடியாது என்பதையும், இலங்கையுடன் கலந்தாலோசிக்காமல் இனிமேலும் ஒருதலைப்பட்டசமாக நடந்துகொள்ள வேண்டாம் என்றும் ஆணைக் குழுவின் தலைவரிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். அமைச்சருடன் வெளிநாட்டமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கொஹனவும் கலந்துகொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply