போலியான நியாயங்கள் வேண்டாம், கல்வித் துறையை மேம்படுத்துங்கள் : ஜனாதிபதி
கல்வித்துறைக்காக ஒரு வருட காலப் பகுதியில் தேசியக் கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கல்வி, உயர்கல்வி அமைச்சர், மற்றும் நிறுவன அதிகாரிகளுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(05) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை உட்பட அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பல்கலைக்கழங்களை ஆரம்பிக்க வேண்டும். இதற்காக பெரும் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள பயன்படுத்தப்படாத கட்டிடங்களை புனர்நிர்மாணம் செய்து பயன்படுத்தக்கூடிய வழிவகைகள் குறித்து கண்டறியப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டின் தேவையை கண்டறிந்து பாடநெறிகளை தயாரிக்கும் சந்தர்ப்பத்தை பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. இதற்காக பல்கலைக்கழகங்களை வலுவூட்ட வேண்டும். போலியான நியாயங்களில் இருந்து விலகி கல்வித்துறையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply