அரச அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோத்தபாயவின் அடுத்த அதிரடி
அரச நிறுவனங்கள் மற்றும் மத்திய நிலையங்களுக்கு திடீர் விஜயத்தை மேற்கொள்ளும் நடவடிக்கையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார். அதற்கமைய நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்துக்கு ஜனாதிபதி நேற்றிரவு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, வரிச் சலுகைகள், அத்தியாவசிய நுகர்வு பொருட்களின் விலைகளில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தினார்.அங்கிருந்தவாறே நிதியமைச்சு மற்றும் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகளை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு ஜனாதிபதி கலந்துரையாடினார்.
சமகால அரசாங்கத்தினால் அமுல்செய்யப்பட்ட வரிச் சலுகைகளின் நன்மைகள் உரிய முறையில் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் கிடைக்கின்றதா என்பது தொடர்பில் கண்காணிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆருசு ஜனாதிபதியின் இந்த திடீர் விஜயங்கள் காரணமாக அரச நிறுவனங்களில் பொறுப்பற்று செயற்படும் அதிகாரிகள் கடும் அச்சத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply