இந்துக்களுக்கென ஒரு தனியான நாடு இல்லை : நிதின் கட்கரி

உலகில் எங்குமே இந்துக்களுக்கு என்று ஒரு தனியான நாடு இல்லாத நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தம் அவசியமானதாக உள்ளதென மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் நேபாளம் இந்து நாடாக இருந்தது. தற்போது அதுவும் மதசார்பற்ற நாடாகிவிட்டது. உலகில் எங்குமே இந்து தேசம் என்று ஒன்று இல்லை என நிதின் கட்கரி சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் இந்துக்களும் சீக்கியர்களும் எங்கேதான் போவார்கள் எனவும் எதிர்க்கட்சிகள் மக்களை தவறான பிரசாரம் மூலம் திசை திருப்புவதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply