போராட்டம் மூலமே குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வைக்க முடியும் : மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சென்னையில் பேரணி நடத்த தி.மு.க. கூட்டணி முடிவெடுத்து உள்ளது. இந்தநிலையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கட்சிகள், சங்கங்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசும், மக்களும் இதுவரை காப்பாற்றி வந்த சமூக நல்லிணக்கம், மதச்சார்பின்மை, ஒற்றுமை ஆகிய தத்துவங்களுக்கு முரணான வகையில் மத்திய பா.ஜ.க. அரசு இந்த குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அனைத்து மதத்தவரும் வரலாம் என்றால் ஏன் முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அண்டை நாட்டவர் வரலாம் என்றால் அதில் ஈழத்தமிழர் புறக்கணிக்கப்பட்டது எதனால்? என்ற கேள்வியை எழுப்பி வருகிறோம்.

மக்களை மதரீதியாக, இனப்பாகுபாட்டுடன் பார்க்கும் சட்டத்தை நிறைவேற்றி இருக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 23-ந்தேதி சென்னையில் மாபெரும் பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடர வேண்டும். கட்சி எல்லைகளை கடந்து, மதம், ஜாதி, மாநில பாகுபாடுகள் கடந்து இப்போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமாக மட்டுமே இச்சட்டத்தை திரும்பப் பெற வைக்க முடியும். ஜனநாயக குரலை எழுப்புமாறு அழைப்பு விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply