அமெரிக்காவில் தென்பட்ட அரியவகை வெள்ளை மான்
அல்பினிசம் என்பது ஒரு மரபணு குறைபாடு. தோலில் நிறம் தோன்றுவதற்கான மெலனின் (கருமை நிறமி) குறைபாட்டால் உடல் முழுவதும் முற்றிலும் வெண்மை நிறமாக காணப்படும். மேலும் இளஞ்சிவப்பான கண்கள், பார்வை குறைபாடு, ஒளி வெறுப்புத்தன்மை போன்றவை காணப்படலாம்.
மனிதர்களில் அரிதாக காணப்படும் இந்த மரபணு குறைபாடு ஒரு சில விலங்குகளிலும் காணப்படுகிறது. அவ்வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் தென்பட்ட வெள்ளை மானின் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்டி ப்ராஸ்ட் என்ற பெண் தனது வீட்டிற்கு பின்னால் உலாவிக்கொண்டிருந்தபோது அங்கிருந்த புதர்களிடையே வெண்மை நிற விலங்கு ஒன்று நடமாடுவதைக் கண்டார். அது அல்பினோ வகை வெள்ளை மான். அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
இது குறித்து துறை சர்ந்த அதிகாரிகள் கூறுகையில், ‘லட்சத்தில் அல்லது சில ஆயிரங்களில் ஒரு மானாக இந்த வெள்ளை மான்கள் தோன்றுகின்றன. வெள்ளை மானின் பெற்றோர்களில் ஒன்றில் பின்னடைவு மரபணுக்கள் இருக்கலாம். பொதுவாக ஒரு ஜோடி, பின்னடைவு மரபணுக்கள் மற்றும் துணையை கொண்டிருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சந்ததிகளில் சிறப்பியல்பு தோன்றும் வாய்ப்பு உள்ளது’ என தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply