கர்நாடகா மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் பொலிஸார் செய்த செயல்கள்

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் காவலர்கள் அதிரடியாக நுழைந்து அனைவரையும் சரமாரியாக அடித்து, கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகுடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நாளுக்கு நாள் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இந்நிலையில், மங்களுரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸார் போராட்டகாரர்களை தடியடி நடத்தி விரட்டியுள்ளனர். பலர் அருகிலிருந்த ஹைலேண்ட் மருத்துவமனைக்குள் ஓடியுள்ளனர்.அவர்களை விரட்டிச் சென்ற பொலிசார், மருத்துவமனை வளாகத்திற்கு கண்ணீர்ப்புகை குண்டு வீசியுள்ளனர். பின்னர், ஐசியூ மற்றும் சிகிச்சை அறைகளின் கதவை உதைத்து அத்துமீறியுள்ளனர்.

மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் சிகிச்சைக்கு வந்தவர்களையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். பொலிஸார் லத்தியுடன் வருவதை கண்ட மருத்துவமனையில் இருந்த மக்கள் தெறித்து ஓடியுள்ளனர்.பின், போராட்டகாரர்களை பிடிக்க நோயாளிகள் சிகிக்சை பெற்று வந்த அறைகளின் கதவைகளை தாக்கி, அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை செய்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply