உயிரே போனாலும் குடியுரிமை சட்டத்தை புதுவையில் அமல்படுத்தமாட்டோம்: நாராயணசாமி

புதுவையில் ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.புதுவை சுதேசி காட்டன் மில் அருகில் நடந்த பொதுக்கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் முஹம்மது மூசா தலைமை தாங்கினார்.தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அன்வர் பாதுஷா முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:-

எனது உயிரே போனாலும் புதுவையில் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த விடமாட்டேன். எங்கள் பிணத்தின் மீது ஏறி நின்றாலும் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்ற விடமாட்டோம். என்றும் சிறுபான்மை மக்களுக்கு புதுவை காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி அரசு உறுதுணையாக இருப்போம்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு முதன்மை துணைத் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான அப்துல் ரஹ்மான், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் தமிழ் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ஆபிரூத்தீன்,

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக புதுவை மாவட்ட தலைவர் பஷீர் அஹமது, கட்சியின் மாநில பேச்சாளர் அஹமது மீரான், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தலைவர் அப்துல் ஹமீது, மஸ்ஜிதே முஹம்மதியா உருளையன்பேட்டை துணைச்செயலாளர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான இஸ்லாமிய மக்கள் பங்கேற்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply