காணாமல் போன நாயை கண்டுபிடிக்க விமானத்தை வாடகைக்கு எடுத்த பெண்

அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் எமிலி தளர்மோ. இவர் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு இன நாயை ஜாக்சன் என பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்தார்.கடந்த வாரம் அந்த நாயுடன் ஒரு மளிகை கடைக்கு சென்றார். அப்போது அந்த நாய் திடீரென காணாமல் போய்விட்டது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 5 வருடங்களாக செல்லமாக வளர்த்த நாயை காணாததால் எமிலி மிக மனவருத்தம் அடைந்தார்.

எமிலி தனது நண்பர்களுடன் பல இடங்களில் தேடினார். தனது செல்ல நாயின் போட்டோவை விமான பயணிகள் உள்பட ஆயிரக்கணக்கானோரிடம் கொடுத்து விசாரித்தார். இருந்தும் நாயை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதை தொடர்ந்து அவர் ஒரு விமானத்தை ரூ.85 ஆயிரத்துக்கு வாடகைக்கு எடுத்து சான்பிரான்சிஸ்கோ மற்றும் ஒக்லாந்து பகுதிகளில் 2 மணி நேரம் தேடினார். இருந்தும் நாய் கிடைக்கவில்லை. எனவே தனது நாயின் போட்டோவுடன் கூடிய பேனரை விமானத்தில் கட்டி பறக்கவிட்டபடி ஆன்லைனில் விளம்பரம் செய்தார்.

மேலும், தனது நாயை கண்டு பிடித்து தருபவர்களுக்கு 7 ஆயிரம் டாலர் அதாவது சுமார் ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். நாயை கண்டு பிடிக்க பண உதவி செய்யும்படி இணைய தளத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply