1.4 லட்சம் கோடி டாலர் செலவினத்துக்கு டிரம்ப் ஒப்புதல்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை புளோரிடா மாகாணம், பாம்பீச்சில் உள்ள மார் எ லாகோ ரிசார்ட்டில் (உல்லாச விடுதி) கொண்டாடுகிறார். இதற்காக அவர் வாஷிங்டனில் இருந்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பாம்பீச்சுக்கு நேற்று முன்தினம் புறப்பட்டுச்சென்றார்.
அப்படி செல்லும்போது அவர் விமானத்தில் வைத்து 1.4 லட்சம் கோடி டாலர் (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.98 லட்சம் கோடி) செலவின மசோதாக்களுக்கு (ஒருங்கிணைந்த ஒதுக்கீட்டு சட்ட மசோதாக்கள்) ஒப்புதல் அளித்து கையெழுத்து போட்டு சட்டங்கள் ஆக்கினார். இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜூட் டீரே தெரிவித்தார்.
இது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான அமெரிக்க மத்திய அரசு துறைகள், திட்டங்கள், அவற்றின் செலவினங்கள் ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வழிவகுக்கிறது.இந்த மசோதாக்கள் சட்டம் ஆக்கப்படாவிட்டால், அமெரிக்காவில் மத்திய அரசு அலுவலகங்கள் மூடக்கூடிய ஆபத்து ஏற்படும். அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி விடும்.இப்போது செலவின மசோதாக்களுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்து விட்டதால், அந்த ஆபத்து நீங்கி விட்டது. இந்த மசோதாக்களுக்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை கடந்த செவ்வாய்க்கிழமையன்றும், செனட் சபை வியாழக்கிழமையன்றும் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply