சுனாமியில் உயிரிழந்த உறவுகளுக்காக இன்று காலை 9.25 மணிக்கு 2 நிமிட மெளன அஞ்சலி
2004 ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை நினைவு கூரும் வகையில் இன்று (26) காலை 9.25 முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் 2 நிமிட மௌன அஞ்சலி கடைப்பிடிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 15 வருடங்களாகும்.
கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரனர்த்தத்தில் சுமார் 35 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில் 5000 ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர்.
அதன்படி, சுனாமி பேரிடரில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூரும் வகையில் கடந்த 2005 ஆம் ஆண்டு தொடக்கம் வருடத்தின் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply