இந்தியாவில் இருந்து போலியோ அடையாள மை பாகிஸ்தான் செல்கிறது
இந்தியாவில் இருந்து போலியோ அடையாள மையை பாகிஸ்தான் இறக்குமதி செய்கிறது. போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்படும் குழந்தைகளுக்கு விரலில், அடையாள மை வைக்கப்படும். இதற்காக ஒரு ‘மார்க்கர்’ பயன்படுத்தப்படும்.
இதுபோன்ற 8 லட்சம் மார்க்கர்களை, பாகிஸ்தானில் போலியோ தடுப்பு நடவடிக்கைக்காக, உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் இருந்து வாங்குவதற்கு முடிவு செய்து இருந்தது.
ஆனால், கடந்த ஆகஸ்டு மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததால் இந்தியாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு தடை விதித்தது.
இந்தியாவில் இருந்துதான் அதிகப்படியான மருந்துகளும் அதன் மூலப்பொருட்களும் பாகிஸ்தான் இறக்குமதி செய்து வருகிறது. இந்த தடை உத்தரவால் உயிர்காக்கும் மருந்துகளுக்கு பாகிஸ்தானில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் என்று அந்நாட்டு மருந்து தொழிற்சாலைகள் எச்சரித்தன. இதனால், இந்தியாவில் இருந்து உயிர்காக்கும் மருந்துகளும் அதன் மூலப்பொருட்களும் மட்டும் இறக்குமதி செய்ய கடந்த செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் விலக்கு அளித்தது.
இந்த நிலையில், ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்தியாவில் இருந்து போலியோ அடையாள மையை ஒரு முறை மட்டும் இறக்குமதி செய்துகொள்ள பாகிஸ்தான் தற்போது அனுமதி அளித்து இருக்கிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply