தைவான் ராணுவ தளபதி உயிரிழப்பு : அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் ரத்து
தைவானில் மூத்த ராணுவ அதிகாரிகள் நேற்று தைபேயில் உள்ள சோங்ஷான் விமானப்படை தளத்தில் இருந்து, யிலன் கவுண்டியில் உள்ள டோங்காவ் ராணுவ தளத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். ஹெலிகாப்டரில் ராணுவ தளபதி ஜெனரல் ஷென் யி மிங், 3 மேஜர் ஜெனரல் உட்பட 13 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், தைபே மலைப்பகுதிக்கு அருகே சென்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் மலைப்பகுதியில் உள்ள ஒரு இடத்தில் அவசரமாக தரையிறக்க முயன்றனர். ஆனால், ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது.
இது குறித்து தகவல் அறிந்த ராணுவ மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கிருந்து படுகாயத்துடன் போராடிக் கொண்டிருந்த 6 பேர் மீட்கப்பட்டனர். எனினும், இந்த விபத்தில் ராணுவ தளபதி ஜெனரல் ஷென் யிமிங், 3 மேஜர் ஜெனரல்கள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் தைபே நகருக்கு கொண்டு வரப்பட்டு, அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டன.
விபத்தில் ராணுவ தளபதி உயிரிழந்ததை அடுத்து, 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அதிபர் டிசாய் இங் வென் தெரிவித்துள்ளார். தனது தேர்தல் பிரச்சாரத்தையும் 3 நாட்களுக்கு ரத்து செய்தார். அவரது தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கட்சியும் 3 நாட்களுக்கு பிரச்சாரத்தை நிறுத்திவைத்துள்ளது. இதேபோல் எதிர்க்கட்சியான கேஎம்டி கட்சி, தனது தேர்தல் பிரச்சாரத்தை 2 நாட்களுக்கு நிறுத்திவைத்துள்ளது.
தைவானில் அதிபர் மற்றும் துணை அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 11-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply