பற்றி எரியும் காட்டுத்தீ : ஆஸ்திரேலிய பிரதமரின் இந்திய வருகை ரத்து?
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 100-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் கருகி நாசமாகி உள்ளது.இந்த காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் உள்பட 20 பேர் பலியாகி உள்ளனர். மேலும் வனவிலங்குகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாராளுமன்றம் தெரிவித்தது.
இதற்கிடையே, நியூசவுத் வேல்ஸ் பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது என அம்மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், காடுகளில் பற்றி எரியும் தீயை தொடர்ந்து, ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது இந்திய பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஜனவரி 13 முதல் 16ம் தேதி வரை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் இந்தியாவில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் ஏற்படும் பிரச்சனைகளை தொடர்ந்து, பிரதமர் ஸ்காட் மாரிசன் தனது இந்திய பயணத்தை ரத்துசெய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply