பொதுத் தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார் டலஸ்

பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான சட்டரீதியான அதிகாரம் மேலும் 55 நாட்களுக்குள் ஜனாதிபதிக்கு கிடைக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் 2ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு அந்த சட்டரீதியான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும். அத்துடன் நாடாளுமன்றம் குறிப்பிட்டவகையில் அன்றைய தினம் கலைக்கப்பட்டால் மேலும் 110 நாட்களில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என்றும் கல்வி அமைச்சர் கூறினார்.

மாத்தறையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு அமைய, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த சில வாரங்களில், அரசியல் கலாசாரத்திற்கு முன்னேற்றமான பல விடயங்களைச் சேர்ப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முடிந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply