20 வருடங்களுக்கு பின் தாண்டிக்குளம் வரை யாழ்தேவி சேவை
‘தெற்கின் தோழன்’ என்ற தொனிப்பொருளில் வவு னியா தாண்டிக்குளம் நோக்கி நேற்றுக்காலை 6.10க்கு புறப் பட்ட யாழ் தேவி ரயில் பகல் 12.00 மணியளவில் தாண்டிக்குளம் ரயில் நிலை யத்தை சென்றடைந்தது. பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்பட்டதன் பின் 20 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக தாண்டிக் குளம் வரை யாழ் தேவி ரயில் சென்றுள்ளது. தாண்டிக்குளத்திலிருந்து காங்கேசன்துறை வரை ரயில் பாதையை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட நடவ டிக்கையாக நிதி சேகரிப்பு நிகழ்வும் நேற்று தாண்டிக் குளம் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. போக்குவ ரத்து அமைச்சர் டலஸ் அழ கப்பெரும 1000 ரூபா பெறுமதியான முதலாவது யாழ் – கொழும்பு ரயில் பயண சீட்டை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜ பக்ஷவுக்கு வழங்கினார்.
கொழும்பில் நேற்றுக் காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக மத வழிபாடுகள் நடைபெற்றன. அமைச்சர் டலஸ், லசந்த அழகியவன்ன, திஸ்ஸ கரலியத்த ஆகியோர் ரயிலி லேயே பயணம் செய்தனர்.
நேற்றுக்காலை சுமார் 12.00 மணியளவில் தாண்டி க்குளம் ரயில் நிலையத்தை அண்மித்த போது பாதை யின் இரு மருங்கிலும் பாட சாலை மாணவர்கள் தேசி யக் கொடியை அசைத்தவாறு ரயிலை வரவேற்றனர். முதல் தடவையாக ரயில் இப் பகுதிக்குள் வருவதால் மக் கள் பெரும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ரயில் வவுனியாவை சென் றடைந்த போது வடமத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க உட்பட பலரும் ரயில் பய ணத்தில் இணைந்து கொண் டமை குறிப்பிடத்தக்கது.
தாண்டிக்குளம் ரயில் நிலையத்தில் விசேட கூட்டமொன்றும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. அமைச்சர்களான டலஸ் அழகப் பெரும, லசந்த அழகியவன்ன, சுசந்த புஞ்சிநிலமே, திஸ்ஸ கரலியத்த, டக்ளஸ் தேவானந்தா, விநாயக மூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), பிரதி அமைச்சர் லயனல் பிரேமசிறி உட்பட பலரும் கலந்து கொண்டனர். நேற்றைய நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் கலந்துகொண்டார்.
போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும கொழு ம்பு – யாழ் பயணச் சீட் டொன்றையும் கிஷோர் எம். பிக்கு வழங்கினார். கொழும்பு கோட்டையி லிருந்து யாழ்ப்பாணம் வரை யிலான பயணச் சீட்டு 1000 ரூபா பெறுமதியானதுடன் கெளரவ வகுப்பு என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
வவுனியா ரயில் நிலை யத்தில் வைத்து அமைச்சர் டலஸ் அழகப்பெருமவை வரவேற்ற போது கிஷோர் எம். பியும் வரவேற்றார். அங்கிருந்து தாண்டிக்குளம் வரையிலும் ரயிலிலேயே அமைச்சர்களுடன் சென்ற னர். இதனையடுத்து ஓமந்தை க்கு வந்த அமைச்சர்கள் குழுவினர் ஓமந்தை ரயில் நிலையத்திற்கான அடிக் கல்லையும் நாட்டினர். ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜ பக்ஷ உட்பட அமைச்சர்கள் ரயில் நிலையத்திற்கான அடிக் கல்லை நட்டதுடன், ரயில் நிலையத்திலேயே மனிதா பிமான கரும பீடம் ஒன் றையும் ஆரம்பிக்கவுள்ளதா கவும் தெரிவித்தனர்.
நேற்று மாலை 3.00 மணி க்கு யாழ் தேவி ரயில் மீண் டும் கொழும்பு நோக்கி புறப்பட்டது. தேசியக் கொடி களாலும் மலர் மாலைக ளினாலும் யாழ் தேவி ரயில் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அமைச்சர்கள், அமைச் சின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், ரயில்வே பாதுகா ப்பு பிரிவினர், ஊடகவியலாளர்கள், மட்டு, வவுனியா இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர்கள் உட்பட சுமார் 300 பேர் இந்த ரயிலில் பயணம் செய்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply