ரூ.19 ஆயிரம் கோடிக்கு போர் விமானங்களை சிங்கப்பூருக்கு விற்பனை செய்யும் அமெரிக்கா

உலகின் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் ராணுவ தளவாட உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. நவீன போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் மற்றும் ஏவுகணைகள் போன்ற அதிநவீன ஆயுதங்கள் இந்நாடுகளில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், 2.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள 12 எஃப் -35பி போர் விமானங்களை சிங்கப்பூருக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது என அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்த அறிக்கையில் ‘குறுகிய ஓடுபாதையில் புறப்படுவதும், செங்குத்தாக தரையிறங்கக் கூடியதுமான பன்னிரண்டு எஃப் பி-35 போர் விமானங்கள் மற்றும் அவற்றிற்கு தொடர்புடைய உபகரணங்களை சிங்கப்பூர் நாட்டிற்கு விற்பனை செய்ய வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 2.7 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 19 ஆயிரத்து 580 கோடி ரூபாய்) ஆகும். இதற்கான ஆவணங்களை பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் அரசிடம் வழங்கியுள்ளது’, என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply