தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியப் பிரதமரை சந்திக்க டில்லி பயணம்

இந்தியா சென்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இந்த வாரம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேச்சுக்கள் நடத்தவிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலும் இச்சந்திப்பு எதிர்வரும் புதன்கிழமை நடைபெறலாம் என எதிர் பார்க்கப்படுகின்றது.

சென்னையில் தமிழக முதல்வர் மு. கருணாநிதியை இக்குழு கடந்த சனிக் கிழமை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தது. சென்னையில் தங்கியுள்ள இக்குழு பிரதமரைச்சந்திப்பதற்காக நாளை புதுடில்லி புறப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.ங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியையும் இக் குழுவினர் சந்திக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான இக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply