சரணடடையும் புலிகளை சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைய நடத்தப்பட வேண்டும்: மாணிக்கவாசகம் கணேசராஜா

சரணடடையும் விடுதலைப் புலி உறுப்பினர்களை சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைய நடத்துமாறு வாழைச்சேனை மஜிஸ்திரேட் மாணிக்கவாசகம் கணேசராஜா இன்று பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார். கடந்த 28 ஆம் திகதி வாகரைப் பிரதேசத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் 90 நாட்கள் அவசரகால சட்ட விதிகளின் கீழ் வாகரைப் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொண்டையன்கேணியைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அமரசிங்கம் (புகழேந்தி) ,வாகனேரியைச் சேர்ந்த பரமக்குட்டி சாமுவேல் (ஹரன்) மற்றும் முள்ளிவெட்டுவானைச் சேர்ந்த செல்லப்பா சிவானந்தன் (ராகுலன்) ஆகியோர் தொடர்பாக இன்று வாகரைப் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மேலதிக அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்த போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறிப்பிட்ட சந்தேக நபர்கள் தொடர்பாக அவர்களை ஆஜர் படுத்தாமலே கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையை பரிசீலித்த மஜஸ்திரேட் எதிர்வரும் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இது தொடர்பாக இன்று பொலிஸார் சமர்ப்பித்துள்ள மேலதிக அறிக்கையொன்றில் எதிர்வரும் 29 ஆம் திகதி ஆஜர்படுத்த நீதிமன்றத்தின் அனுமதியை கோரினர்.இதற்கான அனுமதியை அழித்த வாழைச்சேனை மஜிஸ்திரேட் மாணிக்கவாசகம் கணேசராஜா சரணடையும் விடுதலைப் புலிகளை சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு அமைவாக நடத்தவது தொடர்பான பணிப்புரையையும் விடுத்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply