ஜனாதிபதி தமிழக முதல்வரை இலங்கைக்கு அழைப்பு

இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கைக்கு வர வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருப்பதாக அமைச்சர் ஆறுமுக தொண்டமான் சென்னையில் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் கருணாநிதியை நேற்று கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஆறுமுக தொண்டமான் நேற்று மாலை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் தொண்டமான், இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையை பற்றி அறியவும், இடம் பெயர்ந்த தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் தமிழக முதல்‐அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சியினரும் கொழும்பு வர வேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார்.

அதனை உறுதிசெய்து கொள்ளவே தமிழக முதல்வரை சந்தித்ததாக தொண்டமான் கூறியுள்ளார். இது சம்பந்தமாக முதல்வர் கருணாநிதிக்கு முறைப்படி அழைப்பு அனுப்பப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply