தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாளை இந்திய பிரதமருடன் சந்திப்பு

இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்ட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகம் சென்றுள்ள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறிப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திர பொன்னம்பலம் ஆகியோர் அணமையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இலங்கை நிலவரம், அரசியல் அதிகாரப் பகிர்வு, தமிழர் மறு வாழ்வு உள்ளிட்டவை குறித்துப் பேசினர்.

இந்த நிலையில் நாளை டெல்லி செல்லும் அவர்கள் அங்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது இலங்கையில் தற்போது போர் முடிவடைந்துள்ள நிலையில், அங்கு தமிழர்கள் மறுவாழ்வு, அதிகாரப் பகிர்வு, நிரந்தர அமைதி, தமிழ் மக்களுக்கு சம உரிமை உள்ளிட்டவற்றை இலங்கை அரசிடம் வற்புறுத்தி இலங்கையில் நிரந்தர அமைதி திரும்ப இந்தியா உதவ வேண்டும் என தமிழ் எம்.பிக்கள் கோரிக்கை வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply