நலன்புரி முகாம்களில் இளைஞர்கள் காணாமல் போவதாக திட்டமிட்டு பரப்பப்படும் `வதந்திகள்` உண்மை தன்மை அற்றவை: ஜீ.ஏ. சந்திரசிறி

யுத்தத்தினால் வன்னியில் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் இளைஞர்கள் காணாமல் போவதான திட்டமிட்டு பரப்பப்படும் `வதந்திகள்` உண்மை தன்மை அற்றவையென வன்னியில் இடம் பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பான விடயங்களைக் கையாளும் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி கூறினார்.

நலன்புரி நிலையங்களிலுள்ள மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமற்று, படு மோசமான சூழ்நிலையில் உயிர் வாழ்வதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை மறுத்திருக்கும் அவர், முகாம்களிலிருந்து இளைஞர்கள் எவரும் காணாமல்போகவில்லையெனத் தெரிவித்துள்ளார்.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு நலன்புரி முகாம்களில் தங்கியிருக்கும் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழ்நிலையை உறுதிப்படுத்தும் சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

அத்துடன், பாதுகாப்புத் தரப்பினரிடம் சரணடைந்தவர்கள் நன்றாகப் பராமரிக்கப்பட்டு வருவதுடன், புனர்வாழ்வளிப்பதற்கு முன்னர் அவர்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக மேஜர் ஜென்ரல் சந்திரசிறி தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply